பதிவு செய்த நாள்
01
ஜன
2016
11:01
கோவை: ஆங்கில புத்தாண்டையொட்டி, ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இன்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. கஸ்துாரி மஞ்சள் அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி காட்சி அளிக்கிறார். ஆங்கில புத்தாண்டையொட்டி, ஈச்சனாரி கோவிலில், விநாயகருக்கு, காலை, 4:00 மணிக்கு, மங்கள திரவிய அபிஷேகம், காலை, 5:00 மணிக்கு ஹோமம் நடக்கிறது. சுவாமிக்கு, தங்கக்கிரீடம் அணிவித்து, கஸ்துாரி மஞ்சள், மலர் மாலை அலங்காரம் செய்யப்படுகிறது. பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை, அறநிலையத்துறையினர் செய் துள்ளனர். சிறப்புக்கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் மண்டபத்தில், சிறப்பு அன்னதானம் வழ ங்கப்படுகிறது. இன்று மாலை, தங்கத்தேர் இழுக் கும் வைபவமும் நடக்கிறது.