பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் துாய அன்னை சாரதா தேவியாரின், 163ம் பிறந்த தினவிழா மற்றும் ராமகிருஷ்ணரின் கல்பதரு தின விழா ஆகியன இன்று நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு மங்கள ஆரத்தி, பக்தி பாடல்கள் தொடர்ந்து, கல்பதரு தின சொற்பொழிவு, 7:00 மணிக்கு விசேஷ பூஜை, 8:00 மணிக்கு வேதபாராயணம் நடக்கிறது. நிகழ்ச்சியையொட்டி பஜனை, ஹோமம், சாரதா தேவியாரின் அன்பு மொழிகள் வாசித்தல், ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகள், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி அபிராமானந்தர் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.