Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னை சாரதாதேவி பிறந்த நாள் விழா இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ13 கோடியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் புனரமைப்பு பணி நிறைவு
எழுத்தின் அளவு:
ரூ13 கோடியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் புனரமைப்பு பணி நிறைவு

பதிவு செய்த நாள்

01 ஜன
2016
12:01

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயம் 13 கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது. ராஜகோபுரத்திற்கு வண்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஜன., 20 ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. பழமையான கோவில்:விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வைப்பாற்று கரையில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் 1996 ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு பின் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் நடக்கவில்லை. கோயில் பழமையான நிலையில் இருந்தது.

புனரமைப்பு பணி: இப்பகுதியை சேர்ந்தவர்கள் முயற்சியுடன் மீனாட்சி சுந்தேரஸ்வரர் டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கோயில் புனரமைப்பு பணிக்கு இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்றனர். அதன் படி 2012 அக்., மாதம் சுவாமி, அம்பாள், பரிவார தேவதைகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டு 13 கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன. இதில் அனைத்தும் கற்களால் அமையும் வண்ணம் கோயில் அமைக்கப்பட்டு வந்தது. இதில் சுவாமி சன்னிதி முன்பாக 5 நிலைகள் கொண்ட 70 அடி ராஜகோபுரமும், அம்பாள் சன்னிதி முன்பு 3 நிலைகளில் 50 அடி உயரம் கொண்ட தெற்கு ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. கன்னிமூல கணபதி, முருகன், வள்ளி, தெய்வாணை, பெருமாள், லட்சுமி,ஐயப்பன்,சரஸ்வதி, சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், நவக்கிரகங்கள், துர்க்கை உள்ளிட்ட 14 உப சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்தமண்டபம், மகாமண்டபம்,திருக்கல்யாண மண்டபம்,ஊஞ்சல் மண்டபம்,மடப்பள்ளி, பள்ளியறை உள்ளிட்டவைகள் அனைத்தும் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அனைத்திலும் கலை நயமிக்க சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இறுதி கட்ட பணி: இப்பணியின் நிறைவாக வண்ணம் தீட்டும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இங்கு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நடத்தப்படும், அனைத்து விழாக்களும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

கும்பாபிஷேகம்: தற்போது கும்பாபிஷேகம் ஜன.,20 ல் நடக்கவுள்ளது. இதற்காக யாகசாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேக தினத்தில் பக்தர்களுக்கு இலவச வாகன வசதியும், ஒரு லட்சம் பேருக்கு, ஒரு கோடி ரூபாய் செலவில் 10 இடங்களில் சிறப்பு அன்னதானம் நடக்கவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar