பதிவு செய்த நாள்
09
ஆக
2011
11:08
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆடித்திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்பாள் கெந்தமாதன பர்வதம் எழுந்தருளலுக்காக இன்று கோயில் நடை சாத்தப்படுகிறது. ஆடித்திருவிழாவையொட்டி, கடந்த ஆக.,4 ல் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாள் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. 17ம் நாளான இன்று அதிகாலை சுவாமி, அம்பாள் மற்றும் பெருமாளுடன் தங்க கேடயத்தில் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை ஸ்படிகலிங்க பூஜை, கால பூஜைகள் முடிந்து, காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடு ஆகியவுடன், கோயில் நடை சாத்தப்படும். பக்தர்கள் தீர்த்தமாடவும் அனுமதியில்லை. மீண்டும் இரவு 10 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, அர்த்தஜாம பூஜைகள் நடைபெறும், என இணை கமிஷனர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.