திருத்தணி : திருத்தணியை அடுத்த மத்தூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் 66ம் ஆண்டு தீ மிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவை ஒட்டி தினமும் காலை 10 மணிக்கு மூலவர் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. தினமும் மதியம் 3 மணிக்கு அம்மையார்குப்பம் கிருஷ்ணன் மற்றும் செல்வம் ஆகியோரின் மகாபாரத சொற்பொழிவு நடைபெறுகிறது.இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், இரவு 10 மணிக்கு ஓம் சக்திவேல் குழுவினரின் மகாபாரத நாடகங்கள் நடைபெறுகிறது. வரும் 10ம் தேதி சுபத்திரை திருக்கல்யாணமும், 12ம் தேதி அர்ஜூணன் தபசு மற்றும் 14ம்தேதி தீ மிதி திருவிழா நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர் முனிரத்தினம் அம்மாள், ஒன்றியக் கவுன்சிலர் பிரேமா மற்றும் பொதுக்குழுவினர் செய்துள்ளனர்.