ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் பக்தர்கள் குழு சார்பில், வரும் 12ம் தேதி பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பெண்கள், தங்கள் பெயரை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.முன்பதிவுக் கட்டணம் 25 ரூபாய். முன்பதிவு பெற்றவர்களுக்கு மட்டுமே, பால்குடம் ஊர்வலத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.பால்குடம் ஊர்வலத்தன்று காலை 8.30 மணிக்கு காரை வாய்க்கால் கோவிலுக்கு, இரண்டு லிட்டர் அளவுள்ள பால் குடத்துடன் வர வேண்டும்.காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் கூட்டுப் பிரார்த்தனை, சிறப்பு சொற்பொழிவு, பூஜை நடத்தி, பால்குடம் ஊர்வலம் துவங்கும். நடுமாரியம்மன் கோவில் வழியாக, பெரிய மாரியம்மன் கோவிலை ஊர்வலம் வந்தடையும். தொடர்ந்து, பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடக்கும். இத்தகவலை மாரியம்மன் பக்தர்கள் குழு பொறுப்பாளர் ரகுநாதன் தெரிவித்தார்.