பிள்ளைப் பேறுக்காக தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாகத்தீயில் இருந்து தோன்றிய தெய்வீகப் பாயசத்தை தன் மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்ரை ஆகியோருக்கு அளித்தார். சிறிது பாயாசம் மீதி இருந்தது. அதை எடுத்துச் சென்ற வாயுதேவன் தன் மனைவியான அஞ்சனாதேவிக்குக் கொடுத்தான். அதன் பயனாக அஞ்சனை புதல்வனாக ஆஞ்சநேயர் அவதரித்தார். இந்த வரலாறு சமர்த்த ராமதாசரின் தாஸ பேதம் என்னும் நுõலில் இடம் பெற்றுள்ளது. சத்ரபதி சிவாஜியின் குருநாதரானராமதாசர், ஆஞ்சநேய பக்தராக விளங்கினார். இந்த வரலாறு வால்மீகி மற்றும் கம்ப ராமாயணத்தில் இடம் பெறவில்லை.