நாம் உலகில் பல ஆட்களைப் பார்க்கிறோம். இவர்கள் எல்லாம் வெறும் ஆட்கள், பெரும் ஆள், பெரிய ஆள் ஒருவனே. அவன் இறைவன்தான். பெருமாள் என்ற சொல் சிறப்பாக ராமபிரானையே குறிக்கிறது. ராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்வசு. ராமபிரானைப் போலவே அரசகுடும்பத்தில் பிறந்தவர். புனர்வசு நட்சத்திரத்தில் பிறந்தவர் குலசேகராழ்வார். இவர் ராமபக்தியின் உச்சியையே எட்டிப் பிடித்தவர். கரைகாண இயலாத ராமபக்தி என்ற அமுதக் கடலின் கரையையே கண்டுவிட்டவர். ராமரைப் பெருமாள் என்று கூறும் நம் வைணவ ஆச்சாரியர்கள்.
அந்த ராமபக்திலேயே தம்மை வைணவ ஆச்சாரியர்கள், அந்த ராமபக்திலேயே தம்மை முழுவதுமாகக் கரைத்துக் கொண்டுவிட்ட குலசேகராழ்வாரைக் குலசேகரப் பெருமாள் என்று வாய் மணக்கக் கூறியுள்ளார்கள். ராமரைப் பெரிய பெருமாள் என்றும், குலசேகரரைப் பெருமாள் என்றும், வைணவச் சம்பிரதாயம் போற்றிப் புகழ்கிறது. குலசேகராழ்வாரையும் அவர் இயற்றிய பாசுரங்களையும் அறிந்துகொள்ளாமல், ராமபிரானை அறிந்துகொள்ள இயலாது என்ற கருத்தில், பெருமாளை அறியாதார் பெருமாளை அறியமாட்டார் என்று நயம்படச் சொல்லலாம். இதனால், ராமபிரானை அறிந் துகொள்வதற்குக் குலசேகரரின் பாசுரங்கள் பெரிதும் துணை புரிவான் என்று அறியலாம். பெரிய பெருமாளைப் பாடிய இந்தப் பெருமாளின் பாசுரங்கள் பெருமாள் திருமொழி என்றே சிறப்பாக வழங்கி வருகின்றன. வால்மீகியில் காணாத பலவற்றைக் கம்பனில் காணலாம். அவ்விதம் கம்பர் ராம காதையைப் படைத்ததற்கு, ஆழ்வார்களின் அனுபவ வெளிப்பாடாகிய பாசுரங்களே அடிப்படை அமைத்துத்தந்துள்ளன.