பதிவு செய்த நாள்
07
ஜன
2016
11:01
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு பின், நேற்று காலை உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில், 84.56 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் முதலாவது ஆகும். இக்கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில், 18 லட்சம் பேர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மாதந்தோறும் இறுதி வாரத்தில், கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். வைகுண்ட ஏகாதசி விழாவால், கடந்த மாதம் உண்டியல் திறக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று காலை, கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.இதில், 84.56 லட்சம் ரூபாய் ரொக்கமும், 155 கிராம் தங்கமும், 895 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.