பதிவு செய்த நாள்
07
ஜன
2016
12:01
விழுப்புரம்: வாணியம்பாளையம் சஞ்சீவிராயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் சஞ்சீவிராயர் கோவிலில், 9ம் தேதி காலை 11:00 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், லட்சுமி, தன்வந்திரி, லட்சுமி நரசிம்மர் ஹோமங்கள் நடக்கிறது. அதனை தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு மூலவர் சஞ்சீவிராயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, மாலை 5:00 மணிக்கு சஞ்சீவிராயர் புஷ்பம், துளசியால் அலங்கரிக்கபட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். பின்னர் சீத்தா சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்புறப்பாடு நடக்கிறது. அதே போல், சிறுவந்தாடு லட்சுமி நாராயணர் பெருமாள் கோவிலிலும் வரும் 9ம் தேதி காலை 9:00 மணிக்கு பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.