நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மெட்டாலாவில் வரும், 9ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்திவிழா கொண்டாடப்படவுள்ளது. நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலாவில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8ம் தேதி இரவு சிறப்பு அபி?ஷகம் நடக்கிறது. 9ம் தேதி காலை வெண்ணை சாற்றுதல், வெள்ளி கவசம் அணிவித்தல் உள்ளிட்டசிறப்பு பூஜைகளும் நடக்கிறது. அதேபோல், நாமகிரிப்பேட்டை வேணுகோபால் சுவாமி கோவிலிலும், 9ம் தேதி காலை, 6 மணியில் இருந்து இரவு, 8 மணி வரை சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.