பதிவு செய்த நாள்
07
ஜன
2016
12:01
ஆர்.கே.பேட்டை:அம்மையார்குப்பம் மருவத்துாரம்மன் கோவிலில், தைப்பூசத்தை ஒட்டி, முப்பெரும் விழா நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் மேல்மருவத்துாரம்மன் கோவிலில், வரும், 14ம் தேதி முதல், 17ம் தேதி வரை, முப்பெரும் விழா நடைபெற உள்ளது.இதில், 13ம் ஆண்டு துவக்க விழா, தைப்பூச இருமுடி கட்டும் விழா, கலச வேள்வி பூஜை உள்ளிட்டவை நடைபெற உள்ளன. 14ம் தேதி காலை, கிராம தேவதை பொன்னியம்மன் கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெறும். வரும், 17ம் தேதி காலை, 6:00 மணிக்கு விழா கொடியேற்றமும், அதை தொடர்ந்து, 9:00 மணிக்கு, கலச வேள்வி பூஜையும் நடைபெறும். 10:30 மணிக்கு, கோவில் வளாகத்தில், ஆன்மிக சொற்பொழிவு நடைபெற உள்ளது.