விருத்தகிரீஸ்வரர் கோவிலில் புதிய கொடி மரங்களுக்கு 20ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2016 12:01
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் புதிதாக நடப்பட்ட கொடி மரங்களுக்கு வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா விமர்சையாக நடப்பது வழக்கம். இதற்காக, ஆழத்து விநாயகர் சன்னதி, கோவில் பிரதான கொடி மரம், விருத்தாம்பிகை சன்னதி, நுாற்றுக்கால் மண்டபம் உட்பட ஏழு இடங்களில் உள்ள பழைய கொடி மரங்கள் அகற்றப்பட்டு, கடந்த மாதம் 28ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் புதிய கொடி மரங்கள் நடப்பட்டன. புதிய கொடி மரங்களுக்கு வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு, 19ம் தேதி மாலை 5:30 மணியளவில் பெரியநாயகர் சன்னதியில் முதல் கால யாக பூஜை துவங்குகிறது. 20ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 9:30க்கு மேல் 10:30 மணிக்குள் கொடி மரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.