பரங்கிப்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் 1008 குடம் பால் அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2016 12:01
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 1008 குடம் பால் அபி ஷேகம் நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சி றப்பு அபிஷேகம் மற்றும் 1008 குடம் பால் அபிஷேகமும், சிறப்பு யாகமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானத்தை அறக்கட்டளை செயலர் செந்தமிழ்செல்வி வழங்கினார். ரங்கசாரியார் சுவாமிகள், சடகோப கல்யாண ராம சுவாமிகள், கோபாலாச்சாரியார் சுவாமிகள், சீனு பட்டாச்சாரியார், பத்ரி பட்டாசாரியார், விவசாய சங்க தலைவர் விஜயகுமார், உத்திராபதி, ஆறுமுகம் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீ ராம அனுமன் தர்ம பரிபாலன அறக்கட்டளை நிறுவன அறங்காவலர் சீனு என்கிற ராமதாஸ் செய்திருந்தார்.