பதிவு செய்த நாள்
14
ஜன
2016
12:01
ஆர்.கே.பேட்டை : வீரப்பரெட்டி கண்டிகை கிராமத்தில் உள்ள வீராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும் 24ம் தேதி (தை மாதம் 10) நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, செங்கட்டானுார் கிராமம் அருகே உள்ளது. வீரப்பரெட்டி கண்டிகை. இந்த கிராமத்தில் உள்ள வீராயி அம்மன் கோவில் புனரமைப்பு பணிகள், ஓராண்டாக நடந்து வந்தது.தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.வரும் 22ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன், யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. 23ம் தேதி காலை, புதிய சிலைகள் கரிக்கோலம் ஊர்வலமும், பிரவேச பலியும் நடக்கிறது.மாலை 6:00 மணிக்கு, கோ பூஜையும், அதை தொடர்ந்து, தத்துவார்ச்சனையும் நடத்தப்படுகிறது.மறுநாள் 24ம் தேதி, காலை 5:00 மணிக்கு, யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 6:00 மணிக்கு, கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறும். மாலையில் அம்மன் வீதியுலா நடைபெறும்.