காரைக்குடி: சாக்கோட்டை ஜெயங்கொண்டானி லிருந்து அகில பாரத முருகா சேவா சங்கம் சார்பில், சோழன் சித.பழனிச்சாமி தலைமையில் "வைரவேல் 208 காவடிகளுடன் பாதயாத்திரையாக கடந்த 16-ம் தேதி புறப்பட்டது. நேற்று முன்தினம் காலை குன்றக்குடி வந்தது. வைரவேலுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, அன்று இரவு திருப்பத்தூர் வைரவன் கோயிலை சென்றடைந்தது. தொடர்ந்து சமுத்திராபட்டி, சாணார்பட்டி, ரெட்டியார்சத்திரம், செம்பணாபட்டியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பழநி சென்றடைகிறது. 24-ம் தேதி தைப்பூசத்தன்று "வைரவேலுடன் உச்சிகால பூஜையில் காவடி சென்றவர்கள் பங்கேற்பர்.