திருவெண்ணெய்நல்லூர்: பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்திலுள்ள பல்வேறு கோவில்களில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையிலுள்ள சுமூககணபதி, காசிவிஸ்வநாதர், லட்சுமிநாராயணன் உட்பட 10 கோவில் களில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 9:15 மணிக்கு கணபதிஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. இன்று(19ம்தேதி) சிறப்பு திரவயாஹூதி, பூர்ணாஹூதி, தத்வ ஹோமம் மற்றும் தீபாராதனைகள் நடக்கிறது. நாளை(20ம்தேதி) காலை 6:00 மணிக்கு கோ-பூஜை, விஸ்வரூபம், தத்வார்ச்சனை, மகா பூர்ணாஹூதி நடைபெற்று காலை 10:00 மணிக்கு காசிவிஸ்வநாதர், லட்சுமிநாராயணன் உள்ளிட்ட 10 கோவில்களுக்கும் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை மாநில சர்க்கரை இணைய தலைவர் ஞானமூர்த்தி, ஆலையின் மேலாண்மை இயக்குனர் செல்வராஜ் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.