மனிதப்பிறவியை கடல் என்று பெரியவர்கள் குறிப்படுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2016 03:01
கடல் என்பது ஆழம் காண முடியாதது. முத்து, மரகதம் போன்ற உயர்ந்த பொருட்களும், கடற்பாசி போன்ற மருந்துகளும் உள்ள அதில் நம்மை விழுங்கக்கூடிய திமிங்கிலம் போன்ற ஆபத்துகளும் நிறைந்துள்ளன. இது போல் தான் மனிதப்பிறவியும். வெளித்தோற்றத்திற்கு பார்ப்பதற்கு எல்லாமே இன்பமாகவும், சுகபோகங்கள் நிறைந்ததாகவும் தோன்றினாலும், வாழ்நாள் எவ்வளவு காலம் என்பதும், உண்மை எது, பொய் எது, முழுமையான இன்பம் எது, துன்பம் எது, நல்லவர் யார், தீயவர் யார் என்ற விஷயங்கள் யாராலும் அறிந்து கொள்ள முடியாதது. அதாவது கடலின் ஆழத்தில் கிடக்கும் முத்து மரகதம் போன்று அனுபவித்து மகிழ உலகிலும் பல விஷயங்கள் உள்ளன. தவறான பாதை, தீயபழக்கம், கூடாநட்பு போன்ற திமிங்கலங்களும் இங்கு உள்ளன. இதனால் தான் மனிதப்பிறவியை கடல் என்கிறோம். இதிலிருந்து நீந்திக்கரையேற படகுபோல தோணிபோல இருப்பது இறையருள் ஒன்றுதான். அது இருந்தால் பிறவிக்கடலை நீந்திக்கடந்து பேரானந்தம் அடையலாம்.