கண்ணன் நீலம் கலந்த கரிய நிறமுள்ளவன். முருகனின் நிறம் சிவப்பு. பரிபாடலில் முருகன் வழிபாடு பற்றி சொல்லப்பட்டுள்ள தகவலின் படி. இளஞ்சூரியனை ஒத்த நிறமுடையவன் என்று சொல்லப்பட்டுள்ளது. சூரியன் சிவந்த நிறமுள்ளவன். அதன்படி, முருகனும் சிவப்பு என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அவர் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்தவர் என்பதாலும், சிவப்பாக இருக்கிறார் என்பர்.