அய்யனோர்- அம்மனோர் பண்டிகை:கோத்தரின மக்கள் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2016 10:01
கூடலுார்: கூடலுார் கோக்கால் கிராமத்தில், கோத்தரின பழங்குடியின மக்களின், அய்யனோர்- அம்மனோர் பண்டிகை கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டம், கூடலுார் கோக்கால் பகுதியில் வாழும் கோத்தரின மக்கள், தங்களின் குலதெய்வ பண்டிகையான, அய்யனோர்- அம்மனோர் விழாவை, ஒரு வாரமாக கொண்டாடி வருகின்றனர்.இறுதி நாளான நேற்று, குல தெய்வத்துக்கு நெய் விளக்கு ஏற்றி, வழிபாடுகளை முடித்து விட்டு இரவு, கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர். கோக்கால் கிராமத்தில், ஆண்களும், பெண்களும் பாராம்பரிய உடைகள் அணிந்து, இசைக்கு ஏற்ப நடனம் ஆடினர். சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் கண்டுகளித்தனர்.