பதிவு செய்த நாள்
20
ஜன
2016
11:01
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் இன்று (ஜன.20) காலை 9.45 மணிக்கு விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு மகா கும்பா பிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் ஞானாம்பிகை உடனுறை, காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்பிகை உடனுறை, பத்மகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி ஜன.13ல் துவங்கியது. நேற்று காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசத்துடன் நான்காம் கால யாக பூஜை துவங்கியது. பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5.35 மணிக்கு ஐந்தாம் கால யாகபூஜை துவங்கியது. சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, அனைத்து சமுதா யத்தினருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன், புண்யாஹ வாசத்துடன் ஆறாம் கால யாகபூஜை துவக்குகிறது. 35 குண்டங்களில் வேதவிற்பன்னர்கள் 9 நாட்களாக யாகங்கள் வளர்த்து வருகின்றனர். காலை 9.35 மணிக்கு மகா பூர்ணாகுதியுடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து காலை 9.45 மணிக்கு விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. திருப்பரங்குன்றம் ராஜா பட்டர், துõத்துக்குடி செல்வம் பட்டர் தலைமையில் 120 சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு ஏற்பாடு: கும்பாபிஷேகத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என்பதால், டி.எஸ்.பி., சிகாமணி, இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் தலை மையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெண் பக்தர்கள் நகைகளை தங்கள் ஜாக்கெட்டுடன் இணைத்துக் கொள்ள ஊக்குகள் வழங்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.