பதிவு செய்த நாள்
20
ஜன
2016
11:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று(ஜன.20) வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த நிலையில், கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
முன்னதாக அதிகாலை 4 மணி முதல் விஸ்வரூபம், புண்யாஹவாசனம், கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10.05 மணிக்குமேல் 11 மணி வரை தங்கவிமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவாரங்களுக்கும், ஆண்டாள்,ரெங்கமன்னார், கருடாழ்வாருக்கு மஹாசம்ப்ரோக்ஷணம் பத்ரிநாராய ணபட்டர் தலைமையில் பட்டாச்சாரியர்கள் நடத்தினர். இதில் வானமாமலை ஜீயர் சுவாமிகள், மணவாளமாமுனிகள் மடத்தின் ஜீயர் சுவாமிகள் மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகள், ஆன்மீக பெருமக்கள், மக்கள் பிரதிநிதிகள் என லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் புதுப்பிக்கபட்டுள்ளது. சிங்கம்மாள் குறடு மண்டபம், ஆண்டாள்கோயில் ஊஞ்சல் மண்டபம் ஆகியவை தங்கநிற தகடுகள் பதிக்கபட்டு பொன்னிறத்தில் ஜொலிக்கிறது.