பதிவு செய்த நாள்
12
ஆக
2011
12:08
கன்னியாகுமரி : கன்னியாகுமரி பகவதியம்மன்கோயிலில் உண்டியல் மூலம் 5.62 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் உண்டியல் மற்றும் நேர்ச்சை காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோயிலை சுற்றிலும் 17 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. பகவதியம்மன்கோயில் உண்டியல் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். கடந்த 51 நாட்களுக்கு பின் நேற்று தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் பொன்சுவாமிநாதன், கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன், மேலாளர் சோனாச்சலம்பிள்ளை, கணக்காளர் ராஜேந்திரன், ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. கொட்டாரம் அரசு மேல்நிலை பள்ளி, அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலை பள்ளி, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளின் என்எஸ்எஸ் மாணவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 5 லட்சத்து 62 ஆயிரத்து 979 ரூபாயும், 3 கிராம் தங்கமும், 66 கிராம் வெள்ளியும், ஒரு அமெரிக்க டாலரும், 11 மலேசிய ரிங்கிட் பணமும் இருந்தது.