பதிவு செய்த நாள்
21
ஜன
2016
12:01
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், தலைமைச் செயலர், போலீஸ் ஐ.ஜி., தரிசனம் செய்தனர். பாகூரில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலுக்கு, அரசின் தலைமைச் செயலர் மனோஜ்குமார் பரிதா, போலீஸ் ஐ.ஜி., பிரவீர் ரஞ்சன் ஆகியோர் நேற்று மாலை 6.00 மணிக்கு தரிசனம் செய்ய வந்தனர். அறங்காவலர் குழு சார்பில், பூரணக்கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. மூலநாதர், வேதாம்பிகையம்மன், பால விநாயகர், பொங்குசனி, திருச்சோபமுடையார், திருவிமோச் சனமுடையார் லிங்கத்தை தரிசனம் செய்தனர். கோவில் பிரகாரத்தை வலம் வந்த தலைமைச் செயலரும், ஐ.ஜியும், தலவரலாறுகள் குறித்து, கோவில் அர்ச்சகர் சங்கர நாராயணனிடம் கேட்டறிந்தனர்.