புதுச்சேரி சிவசுப்ரமணியர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2016 12:01
புதுச்சேரி: சித்திவிநாயகர் சிவசுப்ரமணியர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. பெத்துசெட்டிப்பேட்டை சித்திவிநாயகர் சிவசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி, 1008 சங்காபிஷேக மகா யாக விழா 21ம் தேதி துவங்கியது. இரண்டாம் நாளான 22ம் தேதி மேற்குவாயில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு நான்காம் யாகசாலை பூஜை, 8.00 மணிக்கு வள்ளி தேவசேனா சிவசுப்ரமணியர் சுவாமிக்கு மகா அபிஷேகம், 8.45 மணிக்கு 1008 சங்காபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு, திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.