பதிவு செய்த நாள்
25
ஜன
2016
12:01
அன்னுார்: சாலையூர், பழநி ஆண்டவர், கோவிலில் தைப்பூசத்திருவிழா நேற்று நடந்தது. அன்னுார் அருகே சாலையூரில், குன்றின்மேல் பழநி ஆண்டவர் கோவில் உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இக்கோவில் சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது. பழமையான இக்கோவிலில் ஒரு கோடி ரூபாய் செலவில் திருப்பணி துவக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில், கடந்த, 17ம் தேதி, கொடியேற்றத்துடன், தைப்பூசத்திருவிழா துவங்கியது. 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை, தினமும் அதிகாலை, 5:30 மணிக்குசிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று, அதிகாலை, கணபதி ஹோமமும், பின்னர் பழனி ஆண்டவருக்கு அபிஷேக பூஜையும் நடந்தது. நல்லி செட்டிபாளையம், செல்வ விநாயகர் குழுவின் பஜனை நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட காவடிகள் கோவில் சன்னதியில் சமர்ப்பிக்கப்பட்டன.