ராஜபாளையம் : ராஜபாளையத்தில் ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.ஜன.22ல் தீர்த்த யாத்திரை, யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 9.05 மணிக்கு விநாயகர், தத்தாத்ரேயர், பஞ்சமுக ஹனுமான், குருஸ்தான் மற்றும் தன்வந்திரி பாபா, துவாரகா மாயி பாபாவிற்கு கும்பாபிஷேகம், மஹாதீபாரதனை நடந்தன. நிகழ்ச்சியில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா, சென்னை கிருஷ்ணன்கரணை ஷீரடி சாயி டிரஸ்ட் ரமணி, திருவான்மியூர் ஷீரடி சாயிபிரார்த்தனா சமாஜ் குருஜி ஆச்சார்யாஜி உட்பட ஏராளாமான பக்தர்கள் பங்கேற்றனர். இதையொட்டி ராஜபாளையம் நகரில் இருந்து கோயிலுக்கு ஷீரடி சாயி சேவா சமிதி சார்பில் இலவசமாக வாகன வசதி செய்யப்பட்டு இருந்தது. காலை 10 மணி முதல் அன்னதானம் நடந்தது.