பழநி கிரிவீதியில் நிரந்தமாக கண்காணிப்பு "கேமராக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2016 12:01
பழநி : பழநி மலைக்கோயில் கிரிவீதியை நிரந்தமாக கண்காணிக்க 13 இடங்களில் கண்காணிப்பு "கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு பழநி கிரிவீதி அடிவாரத்தில் பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், திருட்டை தடுக்கவும், குழந்தைகள், முதியவர்கள் காணாமல் போனால் எளிதாக கண்டறிய வசதியாக கிரிவீதியில் நிரந்தரமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக பாதவிநாயகர் கோயில் அருகே கட்டுப்பாட்டுஅறை அமைக்கப்பட்டுள்ளது. இதை மதுரை மண்டல ஐ.ஜி., முருகன் துவக்கிவைத்தார். கோயில் இணைஆணையர் ராஜமாணிக்கம், சரவணன்,எஸ்.பி., டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.