கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரியில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று, முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக சிறுவாபுரி சென்றனர்.நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வழிபட்டனர். தைப்பூசத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரியில் குவிந்ததால், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சிறுவாபுரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.