பதிவு செய்த நாள்
13
ஆக
2011
11:08
தென்தாமரைக்குளம் : சாமித்தோப்பு ஐயா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா வரும் 19ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்குகிறது.குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு ஐயா வைகுண்டசுவாமி தலைமைப்பதியும் ஒன்று. இங்கு ஆண்டு தோறும் தை, ஆவணி, வைகாசி மாதங்களில் திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டு ஆவணி திருவிழா வரும் 19ம் தேதி துவங்கி 11 நாட்கள் நடக்கிறது. அன்று காலை கொடியேற்றம், தொடர்ந்து பணிவிடை, பகல் அன்னதர்மம், இரவு வாகன பவனி ஆகியன நடக்கிறது. வரும் 26ம் தேதி எட்டாம் திருவிழாவில் மாலை அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி, நள்ளிரவு அன்னதர்ம்ம் ஆகியன நடக்கிறது. 29ம் தேதி 11ம் திருவிழாவன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை, இரவு பணிவிடை, மதியம் உச்சிபடிப்பு, இரவு யுகப்படிப்பு, வாகன பவனி, அன்னதர்மம் ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பூஜித குருக்கள் பால பிரஜாபதி அடிகளார், பால ஜனாதிபதி, பல லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் மற்றும் ராஜவேல் ஆகியோர் செய்துவருகின்றனர்.