ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் நிதி உதவியுடன் ரூ.10 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்தது. இதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகளுக்கு பின் மூலஸ்தான கோபுர கலசத்தின் மீது வேதமந்திரம் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது. ராமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதி களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.