அந்தியூர்: அத்தாணி அடுத்த, செம்புளிச்சாம்பாளையத்தில் உள்ள, பொன்னாச்சியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு நடந்த குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், அத்தாணி சுற்றுவட்டாரப் பகுதி ஆண், பெண் பக்தர்கள் நூற்றுக் கணக்கானோர் தீ மதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், 2 மணிக்கு மேல், பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.