பதிவு செய்த நாள்
30
ஜன
2016
12:01
பெண்ணாடம்: பெண்ணாடம் தேரடியில் சன்னதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த 27ம் தேதி காலை 7:00 மணியளவில் கணபதி, நவக்கிரக லட்சுமி ஹோமம், மாலை 5:00 மணியளவில் வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம், தீபாராதனை நடந்தது. 28ம் தேதி காலை விசேஷ சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், விமான கலசம் ஸ்தாபிதம் செய்தல், மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி, (ஜன.,29) காலை 5:30 மணி முதல் சிறப்பு பூஜை துவங்கியது. 9:00 மணியளவில் கலசம் புறப்பாடு, 9:15 மணிக்கு விமான கோபுரத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணியளவில் சன்னதி விநாயகர் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.