திருநெல்வேலி மாவட்டம், கடையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீநித்ய கல்யாணி உடனுறை வில்வ வனநாதர் சுவாமி கோயில். இங்கு இருக்கும் தட்டைப்பாறையில் அமர்ந்துதான் பாரதியார் அம்பாளை நோக்கி, காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் உள்ளிட்ட பல பாடல்களை எழுதியுள்ளார்.