உளுந்தூர்பேட்டை: திருநறுங்குன்றம் பகவான் அப்பாண்ட நாதர் கோவிலில் நடந்த நற்காட்சி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உளுந்தூர்பேட்டை தாலுகா, திருநறுங்குன்றத்தில் பகவான் அப்பாண்டநாதர் கோவிலில், நற்காட்சி திருவிழா நடந்தது. காலை 5:30 மணிக்கு ஜின சுப்ரபாதம், காலை 8:30 மணிக்கு திருவறக்கொடி ஏற்றுதல் நடந்தது. காலை 8:45 மணிக்கு, ஸ்ரீ ஜினவாணி ÷ தவிக்கு சதாஷ்டக வழிபாடு, காலை 9:30 மணிக்கு நற்காட்சியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நுõல் வெளியீட்டு விழா, தி யானம் மற்றும் தலைமை அர்ச்சகர் பரதசக்கரவர்த்தி தலைமையில் பூஜைகள் துவங்கி நடந்தது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் ஜெயசந்திரன், சக்கரவர்த்தி, ஜீவக்குமார் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர். நற்காட்சி திருவிழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள ஆயிரகணக்கான ஜெயினர்கள் கலந்து கொண்டனர்.