ராமேஸ்வரம்: மாசி மகாமகத்தையொட்டி தனுஷ் கோடி ஜடாமகுட தீர்த்த கோயிலில் சீரமைப்பு பணிகள் ஜரூராக நடக்கிறது. தனுஷ்கோடி ஜடாமகுட தீர்த்த கோயிலில் பிப்.,22ல் மகாமகம் விழா நடக்கிறது. அன்றைய தினம் நடைபெறவுள்ள தீர்த்தாவாரியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்ச கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். பக்தர்கள் தங்கி செல்ல வசதியாக கோயிலை சுற்றியுள்ள இடங்கள் சுத்தம் செய்யும் பணி துவங்கியுள்ளது. மண் அள்ளும் இயந்திரம் மூலம் முள்மரங்கள், புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்படுகிறது. இப்பணியுடன் கிராவல் சாலையை தார் சாலையாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பக்தர்கள் விரும்புகின்றனர். இதற்கு தேவைப்படும் நிதியை மாவட்ட நிர்வாகம் ஒதுக்க வேண்டும்.