பதிவு செய்த நாள்
04
பிப்
2016
01:02
கும்பகோணம்: மகாமகத்திற்கான தகவல் மையம் அமைத்தல் உள்ளிட்ட எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல், சுற்றுலா துறை மவுனம் காக்கிறது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும், மகாமகம், இம்மாதம், 22ம் தேதி நடக்கிறது. இந்நாளில், பல லட்சம் பேர் இங்கு கூடுவர். இதற்காக, சுற்றுலா துறை, கடந்த முறை சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால், விழாவிற்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், இம்முறை எந்த முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சம், தகவல் மையத்தையாவது அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முந்தைய மகாமகத்தின் போது, சுற்றுலா துறை, சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் போட்டி போட்டு, உணவகங்கள், தகவல் மையங்களை அமைத்து, சிறப்பாகச் செயல்பட்டன. சுற்றுலா தகவல் மையம் அமைப்பது தொடர்பாக, எங்களுக்கு அரசிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.