அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையம் காளியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது. திருவிழா கடந்த, 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கி அம்மனுக்கு தினமும் அபிஷேகம், அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை பக்தர்கள் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். அம்மை அழைத்தல், மாவிளக்கு, கரகம் எடுத்தல் நிகழ்ச்சி மாலையில் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.