Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசு-வேப்ப மரத்திற்கு திருமண விழா: ... பாதூர் பிரத்தியேங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்! பாதூர் பிரத்தியேங்கராதேவி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
27 ஆண்டுகளுக்கு பின்.. ஆதிஜெகநாத பெருமாள் தீர்த்தாரி கண்டருளல்!
எழுத்தின் அளவு:
27 ஆண்டுகளுக்கு பின்.. ஆதிஜெகநாத பெருமாள் தீர்த்தாரி கண்டருளல்!

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
11:02

கீழக்கரை: மகோதய புண்ணிய காலத்தை யொட்டி சேதுக்கரை கடலில் திருப் புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் தீர்த்தாவாரி கண்டருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனிதநீராடினர். தை மாதம் அமாவாசை நாளில் அதிகாலையில் வியதிபாத யோகம், திருவோண நட்சத்திரம், திங்கள் கிழமை கூடிவருவது மகோதய புண்ணிய காலமாகும். கடந்த 1989ல் மகோதய புண்ணிய காலம் நடந்தது. 27 ஆண்டுகளுக்கு பின் இந்த அபூர்வ நிகழ்வு நேற்று நடந்தது. இத்துடன் திருப்புல்லாணி ஆதிஜெக நாத பெருமாள் தீர்த்தாவாரி நிகழ்ச்சியும் நடந்தது. இதற்காக பக்தர்கள் புடைசூழ பெருமாள் கருட வாகனத்தில் சேதுக் கரைக்கு எழுந்தருளினார். தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க திருபாதத்தின் மூலம் பெருமாள் தீர்த்தாவாரி கண்டருளினார். தொடர்ந்து ஸ்ரீரங்கம் ராமானுஜ மகாதேசிகர் உள்பட பக்தர்கள் அனைவரும் புனித நீராடினர்.

மகோதயத்தில் பித்ரு தோஷம் நீங்குவதற்காக சங்கல்ப பூஜைகள் செய்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக நேற்று அதிகாலை முதலே பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சேதுக்கரையில் குவிந்தனர். பெருமாள் தீர்த்தாவாரி கண்டருளியதும் பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்துசேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் நெய்விளக்கேற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சமஸ்தான தேவஸ்தானம் செய்திருந்தது.

எஸ்.பி.பட்டினம்: தை அமாவாசையையொட்டி எஸ்.பி.பட்டினம் அருகே தீர்த்தாண்ட தானம் கடலில் நேற்று ஏராளமான பக்தர்கள் நீராடினர். பின்பு அங்குள்ள சகலதீர்த்தமுடையவர் கோயிலில் வழிபாடுகள் செய்து வழிபட்டனர். சீதையை மீட்க செல்வதற்கு முன் ராமர் இக் கோயிலில் வழிப்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கிறது. சகலதீர்த்தமுடையவர், பெரியநாயகி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

தேவிபட்டினம்: தை அமாவாசையையொட்டி தேவி பட்டினம் நவபாஷாணத்தில் ஏராள மான பக்தர்கள் நீராடி முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து நவகிரகங்களை சுற்றிவந்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் சிரமமின்றி புனித நீராட இந்து அறநிலையத் துறையினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar