சுக்கிரன், சனி, ராகு மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்கள். செவ்வாய் பிப். 27-ந் தேதிக்கு பிறகும் புதன் பிப். 25 வரையிலும் நன்மை தருவர். இதனால் அதிக பலனை காணலாம். பணவரவில் எந்த குறையும் இருக்காது. உங்கள் முயற்சிகளில் வெற்றியும், பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். வீட்டில் இருந்த குழப்பங்களும் பிரச்னையும் நீங்கும். வசதிகள் பெருகும். கிடைக்கும். புத்தாடை. நகை வாங்கலாம். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மார்ச் 3,4-ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும்.
பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க இருந்த தடை விலகும். பிப். 13 மார்ச் 10,11-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.
தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். பணப்புழக்கம் மிக அதிகமாக இருக்கும். போட்டியாளர்கள் வகையில் இருந்த பிரச்னை 27க்கு பிறகு இருக்காது. பிப். 16,17,20,21ல் சந்திரனால் தடை வரலாம். மார்ச் 1,2ல் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பண வரவு இருக்கும்.
கலைஞர்கள் கடந்த மாதத்தை விட சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறலாம். புகழ் பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் புதிய பதவி உள்ளிட்ட நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
மாணவர்கள் சிறப்பாக படிப்பர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை.
விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் பெறலாம். நெல்,சோளம், கேழ்வரகு, கொள்ளு போன்ற பயிர்களில் நல்ல வருவாய் கிடைக்கும். மாத பிற்பகுதியில் புதிய சொத்து வாங்குவதற்கான யோகம் கனிந்து வரும்.
பெண்களுக்கு குடும்பத்தில் பிரச்னை மறையும். கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் நன்மதிப்பு பெறலாம். பிப். 22,23,24ல் சிறப்பான பலனை காணலாம். அபார ஆற்றல் பிறக்கும்.
நல்ல நாள்: பிப். 13,14,15,18,19,22,23,24, மார்ச் 1,2,3,4,10,11,12,13 கவன நாள்: மார்ச் 5,6,7 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: நீலம், வெள்ளை
பரிகாரம்: பவுர்ணமியன்று கேதுவுக்கு அர்ச்சனை செய்யலாம். நரசிம்மர் கோவிலுக்கு சென்று ஏழைகளுக்கு தானம் செய்தால் இடையூறுகள் மறையும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »