Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பணப்புழக்கம் உயரும் விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) பதவி உயர்வு கிடைக்கும்
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) பதவி உயர்வு கிடைக்கும்

பதிவு செய்த நாள்

10 பிப்
2016
03:02

உழைப்பால் உயர்வு பெறும் துலாம் ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் சுக்கிரன்,குரு, ராகு மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்கள். அதோடு புதன் பிப். 25 வரை நன்மை செய்வார். உங்கள் செல்வாக்கு குறையாது. முயற்சியில் வெற்றி உண்டாகும். ராகுவால் பொன், பொருள் சேர்க்கை கிடைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். சமுகத்தில் மதிப்பு உயரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். மார்ச் 8 க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.பக்தி உயர்வு மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன் மனைவி இடையே அன்பு மேம்படும். பிப். 25க்கு பிறகு தம்பதி ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். பிப். 22,23,24 ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். பிப். 27,28,29 ல் பெண்களால் உயர்வு கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கு தகுந்த முன்னேற்றம் உண்டாகும். பிப். 13, மார்ச் 10,11 ல் பண வரவு அதிகரிக்கும். பிப். 25 க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். செவ்வாயால் எதிரி தொல்லை, முயற்சியில் இருந்த தடை பிப். 27 க்கு பிறகு மறையும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். ஆனாலும் பிப். 25 க்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும்.

கலைஞர்கள் நற்புகழ் கிடைக்க பெறுவர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காண்பர்.

மாணவர்கள் சிறப்பான நிலையைக் காணலாம். பிப். 25 வரை போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகளுக்கு வருமானம் ஓரளவு அதிகரிக்கும்.

பெண்கள் சிறப்பான நிலை காண்பர். மார்ச் 3,4 ல் ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். மார்ச் 8 க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

நல்ல நாள்:  பிப். 13,14,15,20,21,22,23,24,27,28,29 மார்ச் 3,4,10,11,12,13
கவன நாள்: பிப். 16,17 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,8 நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்: செவ்வாயன்று முருகனை வழிபடுங்கள். துர்க்கை வழிபாடு நன்மையளிக்கும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வர தவறாதீர்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar