Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்காலில் லூர்து அன்னை தேர் பவனி! மகாமகத்திற்கு கும்பகோணம் தயார் 13ல் கொடியேற்றம், 22ல் தீர்த்தவாரி மகாமகத்திற்கு கும்பகோணம் தயார் 13ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாங்கூரில் 11 கருடசேவை: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2016
05:02

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் திவ்யதேசங்கள் 108ல் நாராயண பெருமாள், குடமாட கூத்தர்,  செம்பொன்னரங்கர், பள்ளி கொண்டபெருமாள்,  அண்ணன் பெருமாள், புருஷோத்தம பெருமாள், வரதராஜ பெருளாள், குந்தநாதன், மாதவப் பெருமாள், திருமேனிகூடம் பார்த்தன் பள்ளி பார்த்த சாரதி பெருமாள் திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன.

Default Image
Next News

இங்கு ஆண்டு தோறும் தை அம்மாவாசை மறுநாள் பிரசித்தி 11 கருடசேவை உத்ஸவம் நடைபெருவது வழக்கம். இவ்வாண்டு 122ம் ஆண்டு கருடசேவை உத்ஸவம் நேற்று இரவு  நடைபெற்றது. கருடசேவையை முன்னிட்டு 11 பெருமாள்களும் தங்களது கோயில்களில் இருந்து புறப்பட்டு மேற்று மிலை மணிமாட கோயிலுக்கு வந்தனர். அவர்களை திருமங்கை ஆழ்வார் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11 பெருமாள்களும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு திருமஞ்சணம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு 11: 30 மணிக்கு மணிமாட கோயில் கோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், தங்க ஹம்ஸ வாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளினர். தொடர்ந்து 11 பெருமாள்ககளும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று தீப ஆரத்தி எடுக்கப்பட்டது.  

அப்போது  அங்கு கூடியிருந்த பக்தர்கள் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களை பாடி பெருமாள்களை சேவித்தனர். இதனை தொடர்ந்து இரவு 12: 30 மணிக்கு 11 பெருமாள்களின் வீதியுலா காட்சி நடைபெற்றது. கருடசேவை உத்ஸவத்தில் நாகை கலெக்டர் பழனிசாமி, கடலூர் கலெக்டர் சுரேஷ்குமார்,  புதுச்சேரி அமைச்சர் தியாகராஜன் மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த 45 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு 11 பெருமாள்களையும் ஒரே இடத்தில் கண்டு சேவித்தனர். தொடர்ந்து 11 பெருமாள்களும் நான்கு வீதிகளையும் வலம் வந்து அதிகாலை 3 மணிக்கு மீண்டும் மணிமாட கோயிலில் எழுந்தருளினர். உத்ஸவத்தை முன்னிட்டு கோயில் நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரப்படவில்லை.  இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருநாங்கூர் 11 கருடசேவை உத்ஸவ கமிட்டியினர் செய்திருந்தனர். இந்த உத்ஸவத்தை முன்னிட்டு சீர்காழி டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நாகை, மயிலாடுதுறை, சீர்காழியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ தெப்பல் உற்சவத்தில், சண்முக சுப்ரமணியர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar