Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் ... காளாத்தீஸ்வரர் திருக்கல்யாணம் பக்தர்கள் பரவசம்: இன்று தேரோட்டம் காளாத்தீஸ்வரர் திருக்கல்யாணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மும்மூர்த்திகளும் வீற்றிருக்கும் திருமூர்த்திமலையில் குமரக்கடவுள்
எழுத்தின் அளவு:
மும்மூர்த்திகளும் வீற்றிருக்கும் திருமூர்த்திமலையில் குமரக்கடவுள்

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
01:02

உடுமலை: திருமூர்த்தி மலையில் வீற்றிருக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில், கும்பாபிஷேக விழா, நேற்று மாலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது; வரும் 26ம் தேதி காலை, மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

ஜோதிக் கம்பம்: அமணலிங்கேஸ்வரர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில், அமணலிங்கேஸ்வரர் சன்னதி முன்புறமாக சிறிது துாரத்தில், 30 அடி உயரமுள்ள, ஜோதிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கம்பத்தின் அடிப்பாகத்தில், அட்ட திக்குகளையும் நோக்கியவாறு சுற்றிலும் பத்ரகாளி, வனதுர்க்கா தேவி, விசாலாட்சி ஆகிய, மூன்று சக்தி மும்மூர்த்தங்களும், ஊர்த்தவதாண்டவர், அகோர வீர பத்திரர் ஆகிய இரண்டு சிவ மூர்த்தங்களும், ராமாவதாரம், நரசிம்ம அவதாரம், வேணுகோபாலர் ஆகிய, மூன்று வைணவ மூர்த்தங்களும்  வடிவமைக்கப்பட்டுள்ளன. கார்த்திகை திருவிழாவன்று இந்த கம்பத்தில், பக்தர்கள் முன்னிலையில், ஜோதி ஏற்றப்படுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு, உடுமலை சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் தங்கியிருந்து, ஜோதி தரிசனம் கண்டு, வழிபட்டு செல்கின்றனர்.  பாளையப்பட்டு காலத்தில், ராமாயணம் கதை நிகழ்ச்சிகளும், வைணவ கோவில் திருப்பணிகளும் அதிகமாக நடந்துள்ளன.  அந்தக் காலகட்டத்தில்தான் மேற்குறிப்பிட்ட வைணவ மூர்த்தங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஜோதிக்கம்பத்தில் பொறிக்கப்பட்டுள்ள, சிவ மூர்த்தங்களும், வைணவ மூர்த்தங்களும் அக்காலத்தில், சைவ, வைணவ சமயங்களின் ஒற்றுமைக்கு சான்றாக விளங்குகிறது.

சுப்ரமணிய சுவாமி கோவில்: மலையும் மலையை சார்ந்த இடமும் குறிஞ்சி. அக்குறிஞ்சிக்கு வேந்தன் குமரக் கடவுள். குன்றி ருக்கும் இடமெல்லாம் குமரனிருக்குமிடம். அவ்வாறிருக்க, மும்மூர்த்திகளும் வீற்றிருக்கும் திருமூர்த்திமலையில் திருக்குமரக்கடவுளுக்கும் கோவில் உள்ளது. இக்கோவிலில், அழகு முகிழ் தமிழ்க்கடவுள், இங்கு பாலசுப்ர மணியராக காட்சியளிக்கிறார். ஒவ்வொரு கிருத்திகை நாளன்றும், கார் மயில் வாகனத்தில், பாலசுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் முருகனுக்குரிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar