பொதுவாக சிவன் கோவில்களில் பைரவர் ஒருவர் மட்டுமே இருப்பார். சில கோவில்களில் இரண்டு பைரவர்களும், அரிதாக மூன்று பைரவர்களும் காட்சி தருவர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகிலுள்ள ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவிலில் அஷ்ட (எட்டு) பைரவர்கள் தனித்தனி சன்னிதிகளில் இருக்கின்றனர். இதில் அசிதாங்க பைரவர் சூரியனுடனும், சண்ட பைரவர் சந்திரனுடனும், பீஷன பைரவர் பீட வடிவிலும் காட்சி தருகின்றனர். கபால பைரவர் ராஜகோபுரத்தின் உச்சியில் இருக்கிறார். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் ஒரே சன்னிதியில் பதினாறு பைரவர்களை தரிசிக்கலாம். இவர்களை ஷோடச பைரவர் என்பர். ஷோடசம் என்றால் பதினாறு. கும்பகோணம் அருகிலுள்ள திருவிசநல்லுõர் யோகானந்தர் கோவிலில் ஒரே சன்னிதியில் நான்கு பைரவர்கள் இருக்கின்றனர்.