கொல்லிமலையை ஆட்சி செய்த வல்வில் ஓரி மன்னன் சிறந்த சிவபக்தன். ஒரு சமயம் அவன் வேட்டைக்கு சென்றான். அவனுக்கு அருள் புரிய எண்ணிய சிவன் பன்றி வடிவில் வந்தார். பன்றியைக் கண்ட மன்னன் அதன்மீது அம்பு எய்து கொன்றான். அருகில் சென்று பார்த்தபோது பன்றி விழுந்த இடத்தில் ரத்தம் வழிந்த நிலையில் லிங்கம் இருந்தது. திடுக்கிட்ட மன்னன் மனம் வருந்தி கண்ணீர் விட்டான். தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனுக்கு காட்சி தந்தருளினார். பின் அவ்விடத்தில் மன்னன் சிவனுக்கு கோவில் கட்டி கைலாசநாதர் என்று பெயர் சூட்டினான். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. உயிர்களை தெரியாமல் வதைத்த பாவம் நீங்க இங்கு வேண்டிச் செல்கிறார்கள்.