சிவாலயத்தில் மொத்தம்
ஐந்து நந்திகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும். சுவாமி அருகில் இருப்பது கைலாச
நந்தி. அடுத்து இருப்பது விஷ்ணுநந்தி. மூன்றாவதாக தெற்கு நோக்கி மான்
மழுவுடன் இருப்பது நின்ற நிலையில் இருப்பது அதிகார நந்தி. நான்காவது
சாமான்ய நந்தி. ஐந்தாவது மகாநந்தி. மகாநந்திக்கே பிரதோஷ பூஜை நடத்துவர்.
ஐந்து நந்திகளை மிகப் பெரிய கோவில்களில் பிரதிஷ்டை செய்திருப்பர். நந்தி
என்ற பெயர் சிவபெருமானுக்கு உரியது. தமக்கு அருகில் இருந்து பணி
செய்பவர்களுக்கும் தமது திருநாமத்தை அன்புடன் வழங்கியுள்ளார். எனவே நந்தி
என்ற பெயர் தான் பொதுவே தவிர, அவர்கள் வேறு வேறு நிலையில் உள்ளவர்களே.