Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் ... கோட்டை மாகாளியம்மன் திருவிழா: எருமை கிடா எடுக்கும் நிகழ்ச்சி! கோட்டை மாகாளியம்மன் திருவிழா: எருமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
150 கிலோ எடை குறைந்தாள் கஸ்தூரி பழநியில் பக்தர்கள் வரவேற்பு!
எழுத்தின் அளவு:
150 கிலோ எடை குறைந்தாள் கஸ்தூரி பழநியில் பக்தர்கள் வரவேற்பு!

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
11:02

பழநி: கோவை மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் இருந்து பழநி திரும்பிய கோயில் யானை கஸ்துாரி 150 கிலோ எடை குறைந்துள்ளது. மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்காக ஜன., 6ல் பழநி பெரியநாயகியம்மன் கோயில் யானை கஸ்துாரி அழைத்துச் செல்லப்பட்டது. 49வயதான கஸ்துாரி புத்துணர்வு முகாமிற்கு சென்றபோது மொத்த எடை 4,740 கிலோவாக இருந்தது. தற்போது 150 கிலோ எடை குறைந்து 4,590 கிலோவாக உள்ளது.நேற்று காலை 10 மணிக்கு பழநி வந்த கஸ்துாரிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் தங்க முலாம் பட்டை அணிவிக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க, ஆரத்தி எடுத்தனர். பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது.கோயில் வெளிப்பிரகாரத்திலுள்ள கொடிமரம் அருகே கஸ்துாரி யானைக்கு தீபாராதனை நடந்தது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், மருத்துவர்கள் சக்திவேல்பாண்டி, சுரேஷ் ஆகியோர் வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்ட உணவுபொருட்களை வழங்கினர். அதன்பின் வழக்கமான இடத்திற்கு கஸ்துாரி அழைத்து செல்லப்பட்டது.

இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறுகையில்,
“ புத்துணர்வு முகாமில் நாள்தோறும் உடற்பயிற்சி, இயற்கை முறையில் சத்தான உணவு வழங்கல் போன்ற காரணங்களால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, கஸ்துாரி புத்துணர்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. தினமும் 3 கிலோ அரிசி, 2 கிலோ பாசிப்பயிறு, 1 கிலோ கொள்ளுப்பயிறு கலந்த சத்தானஉணவு வழங்க அறிவுறுத்தியுள்ளனர். கடந்தாண்டை போல முகாமில் நடந்த கயிறு இழுக்கும் போட்டியில் யானை கஸ்துாரி வெற்றி பெற்று கழுத்தில் அணிவிக்கும் மணியை பரிசாக பெற்றுள்ளது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar