பதிவு செய்த நாள்
29
பிப்
2016
11:02
ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் குண்டம், பொங்கல் திருவிழா, கடந்த, 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கொடியேற்றம், 22ம் தேதி நடந்தது. இந்நிலையில் பால் குட ஊர்வலம் நேற்று நடந்தது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஓம் சக்தி பராசக்தி என கோஷமிட்டு வந்தனர். காவிரி ரோடு, ஆர்.கே.வி., ரோடு, மணிக்கூண்டு, கச்சேரி வீதி, மரப்பாலம் வழியாக ஊர்வலம் கோவிலை அடைந்தது. இதை தொடர்ந்து, மூலவருக்கு பாலாபி?ஷகம் நடந்தது.