நத்தம் மாரியம்மன் கோயில் விழா: வழுக்கு மரம் ஏறிய இளைஞர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2016 10:03
நத்தம்; திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இளைஞர்கள் போட்டி போட்டு வழுக்கு மரம் ஏறினர்.
பிப்., 15ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் கரந்தமலை கன்னிமார் கோயில் தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள், காப்பு கட்டி விரதம் தொடங்கினர். அம்மன் வாகனங்களில் நகர்வலம் செல்வது உள்ளிட்ட வைபவங்கள் நடந்தன.நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் என நேர்த்திக் கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நேற்று மாலை நடந்தது. பகலில் கோயில் முன் வழுக்கு மரம் ஊன்றப்பட்டது; இளைஞர்கள் போட்டி போட்டு மரம் ஏறினர். அதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இரவு 10 மணி வரை பூக்குழி இறங்கினர். பின், வழுக்கு மரம் அம்மன் குளத்தில் விடப்பட்டது. இன்று பகலில் மஞ்சள் நீராட்டு, இரவில் அம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் செல்வதுடன் விழா நிறைவடையும். சரவணன் எஸ்.பி., மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மொட்டை அடிப்போருக்கு கோயில் பணியாளர் பணி? இந்த விழாவில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களை கோயில் பணியாளராக அறிவிக்க வேண்டும்; மத்திய அரசு, தேசிய அளவில் முடித்திருத்தும் தொழிலாளர் நிலை அறிய தனி கமிஷன் அமைத்து, கமிஷன் அறிக்கையை பார்லிமென்டில் தாக்கல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.