ராமேஸ்வரத்தில் சிவராத்திரி விழா சுவாமி, அம்மன் வீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2016 10:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சிவராத்திரி விழாவையொட்டி சுவாமி, அம்மன் வெள்ளி வாகனத்தில் எழுந்தருளினர். இக்கோயிலில் மாசி சிவராத்திரி விழா கடந்த 29ம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது. நேற்று 3ம் நாள் விழா நடந்தது. ராமநாதசுவாமி பிரியா விடையுடன் வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி கெந்தமாதன பர்வதம் மண்டகபடிக்கு புறப்பாடாகினர். தொடர்ந்து கோயில் நடை சாத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கோயில் அதிகாரிகள் கக்காரின், ராஜாங்கம், அண்ணாதுரை, கமலநாதன் உள்பட பக்தர்கள் ஏராளமானபேர் தரிசனம் செய்தனர். பின்னர் மண்டகப்படியில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி கோயி லுக்கு வந்ததும் நடை திறக்கப்பட்டு அர்த்தசாம பூஜை நடந்தது.